இந்தியாதான் தனக்குப் பிடித்த நாடு என்று ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகரான மார்கஸ் எங்கல் என்பவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து தனது அனுபவங்களை வீடியோவாக எடுத்து அதனை இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதனால் மார்க் டிராவல்ஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறார். பல்வேறு நாடுகளில் பயணித்த மார்கஸ், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் பயணித்த நாடுகளிலேயே இந்தியாதான் தனக்குப் பிடித்த நாடு என்றும் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு சுதந்திரமாக உணர்ந்ததில்லை என்றும் இதனால்தான் இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
			















