தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் - பின்னணி என்ன?
Jan 14, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா சார்பில் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம் என்பது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சர்வதேச நாடுகள் எல்லாம் தங்களுக்குள் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகப் பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு கூட்டமைப்பு தான் ஜி 20. ஜி 20 கூட்டமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் மேல் ஜி 20 நாடுகளே பங்களிக்கின்றன. எனவே, இந்த உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமையேற்று ஜி 20 உச்சிமாநாட்டை தங்கள் நாட்டில் நடத்தி வருகின்றன.

2025ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாட்டை தென்ஆப்பிரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போதுதான் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 கூட்டமைப்பில் நிரஉறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த வாரம் அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு கூட்​டத்​தில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஜி 20 கூட்டமைப்பில் தென்னாப்பிரிக்கா இருக்கக் கூடாது என்றும், அந்நாட்டில் நடைபெறும் இனப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் எதாண்டிச் செல்கின்றன என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், ஜி 20 மாநாட்டில் தாம் கலந்து போவதில்லை என்று கூறிய ட்ரம்ப், தனக்குப் பதிலாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். இந்தச் சுழலில், ஜி 20 உச்சி மாநாட்டை தென்னாப்பிரிக்கா நடத்துவது அவமானம் என்றும், அந்நாட்டின் தலைமையில் நடக்கும் உச்சி மாநாட்டை அமெரிக்கா முற்றிலுமாக புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகள் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுவதும் தான் புறக்கணிப்புக்குக் காரணம் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஜி20 கூட்டத்தை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ புறக்கணித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான நிதியாண்டில் நாட்டுக்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை 7,500 ஆகக் கட்டுப்படுத்தவுள்ளதாக அறிவித்த அமெரிக்க அரசு, அதில், பெரும்பாலும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெள்ளையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் அப்போதைய அதிபர் ஜோ பைடனின் அரசு 125,000 அகதிகளை அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வரும் டிசம்பர் ஒன்றும் தேதி முதல் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்கா, அடுத்த ஓராண்டுக்கு ஜி 20-க்கு தலைமை வகிக்கும். ஏற்கெனவே, அமெரிக்காவின் ஜி 20 உச்சி மாநாட்டை மியாமி​யில் 100,000 சதுர அடியில் உள்ள தனது தேசிய டோரல் மியாமி கோல்ஃப் கிளப்பில் நடத்த உள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ட்ரம்பின் மியாமி கிளப் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டும் என்று கூறப்படுகிறது.

Tags: G20 Summit in South Africa: Trump boycotts - what's the backgroundஜி20 உச்சி மாநாடுபுறக்கணித்த ட்ரம்ப்americausaதென்னாப்பிரிக்கா
ShareTweetSendShare
Previous Post

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

Next Post

மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் ரூ.4,100கோடி வருவாய்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies