திமுக ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், நான்கரை ஆண்டுகால ஆட்சியில், தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்தது என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததை விட வேறு என்ன செய்திருக்கிறீர்கள்? என்றும் அவர் வினவினார்.
துறைகள் வாரியாக லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளதாகவும், ஊழல் நிறைந்த தமிழகம் என்று சொல்லும் அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெறுவதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.
















