பயங்கரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட 67 கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பி.எப்.ஐ. அமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகள் நடத்தி, 2022ல் அந்த அமைப்புக்குத் தடை விதித்தனர்.
மேலும், பி.எப்.ஐ. அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக, அந்த அமைப்புக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது, பயங்கரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட 67 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
















