ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் உண்மையில் மரணமடையவில்லை என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் உடல்நிலை மோசமாகி நாகேந்திரன் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் ஜாமின் கோரிய மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாகக் கூறுவது முற்றிலும் பொய் எனப் பகீர் வாதம் ஒன்றை முன்வைத்தார்.
மேலும் நாகேந்திரனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவரை தமிழக அரசு தப்ப வைத்துவிட்டதாகவும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் குற்றம்சாட்டினார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















