IRONMAN 70.3 Goa பந்தயத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டு அசத்தினார்.
IRONMAN 70.3 கோவா என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் என மூன்று வகையான போட்டிகளைக் கொண்டது.
இதில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில், கடுமையான உடற்பயிற்சிகளுக்கு பெயர் பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை, இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
















