இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!
Aug 7, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகரை சேர்ந்த அன்மோல் சிங் என்பவர், கடந்த 4-ம் தேதி அங்குள்ள புதிய மண்டி பகுதிக்கு, தன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.

மேலும் ஸ்கூட்டருக்கான உரிய ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்லவில்லை. இதன் காரணமாக ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு 20 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அன்மோல் சிங், அதனைச் சமூக வலைதளத்தில் பதிவிட வைரலானது.

இதனையடுத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற சாமானியருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த உத்தரப்பிரதேச போலீசாரின் செயலை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த அம்மாவட்ட எஸ்பி, அபராதம் விதித்த எஸ்ஐயின் தவறால் இந்தப் பிழை ஏற்பட்டதாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

Tags: UP police fine two-wheeler driver Rs. 20 lakh
Share
Tweet
SendShare
Previous Post

பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!

Next Post

IRONMAN 70.3 Goa பந்தயத்தில் பங்கேற்ற அண்ணாமலை!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies