கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் பட டீசர் வெளியாகி உள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் அங்கம்மாள் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார்.
மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தமிழ் திரைப்படமான அங்கம்மாள் படம் வென்றுள்ளது. இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகிக் கவனம் பெற்று வருகிறது.
















