ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கிட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானம் நடைபெற்றது.
அதன்படி, முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் சிறிய முதலீட்டு திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கச் செல்லும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறிச் செயல்படும் YOUTUBE சேனல்கள்மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், அதுபோல, ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கிட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















