ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் 3 பேரைப் பயங்கரவாத தடுப்பு படையினர் குஜராத்தில் கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 6-ம் தேதி குஜராத்தில் ஆயுதங்களைப் பரிமாற்றம் செய்ய வந்தபோது, அகமது சயீத் ஜீலானி, முகமது சுஹைல் முகமது சுலேமான் மற்றும் அசாத் சுலேமான் சைபி எனும் மூவரை கைது செய்ததாகப் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள், ரிசின் என்ற அதிக விஷத்தன்மை கொண்ட கெமிக்கல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ரிசின் என்ற கெமிக்கல் சயனைடை விட மிகக்கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். இதனைச் சுவாசித்தாலோ, ஊசி மூலம் உடலில் செலுத்தினாலோ அல்லது வாய் வழியாக உட்கொண்டாலோ உடனடி மரணம் ஏற்படும்.
இவர்களை கைது செய்ததன் மூலம், மிகப்பெரிய ரசாயன தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. கைதான மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















