டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாகத் தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பயங்கரவாதிகள் ஹரியானாவில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, 32 கார்களைப் பயன்படுத்தி மாபெரும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
32 கார்களில் வெடிபொருட்களை எடுத்துச் செல்லப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், முக்கிய நபர்கள் கைதானதால் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
















