ரஜினி 173 அப்டேட் வந்த 4 நாட்களில் சுந்தர்.சி. ஓட்டம் பிடித்துள்ளார். சுந்தர் .சி.யின் இந்தத் திடீர் முடிவின் பின்னணி என்ன? தலைவர் 173ன் அடுத்த இயக்குநர் யார்? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
சூப்பர் ஸ்டாரும், விண்வெளி நாயகனும் எப்போ ஒன்னா நடிக்கப் போறாங்க? மத்த மாநிலத்துல டாப் ஸ்டார்ஸ் ஒன்னா சேந்து நடிக்கிறாங்க… தமிழ் சினிமால மட்டும் ஏன் ரொம்ப பன்றாய்ங்கன்னு ஊர் முழுக்க பேச்சு. ஒருவழியா பேசுன வாய்ய அடைகிற மாதிரி வந்துச்சு கோலாகலமான அப்டேட். அந்த அப்டேட்டு 5 நாளு கூடத் தாங்கல. எடுத்தேன் பாரு ஓட்டம்ன்னு ஓடிருச்சி. கடந்த செப்டம்பர்ல நடந்த சைமா அவார்ட் நிகழ்ச்சியில பேசிய நடிகர் கமல்ஹாசன் “ இத்தன நாள் ஒரு பிஸ்கட்ட இரண்டா உடச்சு ரெண்டு பேரும் பாதியா சாப்பிடுங்கன்னு சொன்னாங்க…. அதுநால பிரிஞ்சி இருந்தோம். முழு பிஸ்கட்டையும் நல்லா சாப்பிட்டோம்.
ஆனா அந்த ருசி போதும் மறுபிடியும் பாதி பாதியா ஒரு பிஸ்கட்ட பிரிச்சிக்கிறோம்ன்னு” பேசிருப்பாரு. வழக்கம்போல கமல் பேசுறது ஒன்னும் புரியல நாளும் Decoding பன்ன பன்ன புரிஞ்சி போச்சு ரசிகர்களுக்கு. அதுக்கு அப்பறம் ஏன் தலைவன் தான், ஏன் நாயகன் தான் பெருசுன்னு ட்விட்டர்ல செல்ல சண்டைகள் போட்டுகிட்டாங்க.
அதுக்கு ஏத்த மாதிரியே நவம்பர் 9ம் தேதி கமல் தயாரிக்க தலைவர் 173 படத்த சுந்தர் .சி இயக்குறாருன்னு சொல்லி அப்டேட் விட்டாங்க. அந்த அப்டேட் வந்த பின்ன மீம்ஸ்சு மன்னர்கள் தங்கள் கைவரிசைய காட்டிடாய்ங்க. அரண்மனை 5 மாதிரி இருக்குமோ. இல்லைன்னா ரஜினிய மந்திரவாதியா ஆக்கிருவாய்ங்களோன்னு மீம்ஸ் தெரிக்கவிடபட்டுச்சு. இதுல குறுக்க இந்தக் கௌஷிக் வந்தான்ற மாதிரி சுந்தர் அண்ணே வந்தாப்ல…. அப்போ ஹிப்ஹாப் தமிழா தான் மியூசிக்…. பண்டிகைய கொண்டாடுகளேன்னு ஆதி ரசிகர்கள் உற்சாகம். வழக்கம் போல அதுக்கும் மீம்ஸ் போட்டாங்க. ஆனா அந்த அப்டேட்டு மோன்தா புயலா மாறி வந்த அடையாளமே தெரியாம போச்சு. சுந்தர், ரஜினியோட எல்லா படத்தையும் சேத்து வெச்சு ஒரு கத சொல்லிருக்காருன்னு ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் ரஜினி கதையில தேவையில்லாம தலையிடுறாருன்னும் பேசப்பட்டுச்சு.
இதுக்கு நடுவுல குஷ்புவ சுந்தர் சி. நடமாட சொல்லி இருப்பாரு போல…. அதுநால தான் படம் ட்ராப் ஆச்சுன்னு கமெண்ட் செய்த ரசிகர்கிட்ட உங்க வீட்டுல ஒருத்தவங்கள நடனம் ஆட வைக்கலான்னு யோசிகிட்டு இருந்தோம்ன்னு ரிப்ளே பன்னிருப்பாங்க குஷ்பு.
மீம் மன்னர்கள் இதையும் விட்டு வைக்கல. ஆளே இல்லாத கடைக்கு எதுக்கு அப்டேட்…. யார டீ ஆத்தி ஏமாத்துறீங்கன்னு ஒரே கலாய் தான். இருந்தா கூட ரஜினி விலகல படத்தில இருந்து. அப்போ கண்டிப்பா இந்தப் பிராஜெட் பொங்கலுக்கு RKFI சொன்னது போல வெளியாகுதுன்னு ஒரு நம்பிக்கை இருந்தா கூட இயக்குநர் யாரு யாருன்ற கேள்விய பொறுத்தவர வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் இல்லன்னா லோகேஷ் கனகராஜ் எடுக்கலாம்ன்னு தகவல் ஊரு முழுக்க உலா வந்துட்டு இருக்கு. ஆனா படத்த பத்தி குறும்படம் போட்ட ஆண்டவர், கதைய கேட்டுட்டு அப்டேட் போட்டிருக்கலாம்…….. இப்படி கூப்பிட்டு வெச்சி செஞ்சி விட்டீங்களே..
















