6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!
Mar 15, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது பார்க்கும் பணி முடியாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்த 6 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இஸ்லாமாபாத்தால் இன்னும் சரி செய்ய முடியவில்லை. குறிப்பாக நூர்கான் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், ஆப்ரேசன் சிந்தூர் வலிமையை இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

Open source intelligence, சுருக்கமாக OSINT-ன் நிபுணர் டேமியன் சைமனின் கூற்றுகள், பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல்களால் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன… கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு அருகே இந்தியா தாக்கியதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவுகளின்படி, இந்திய படைகளால் குறிவைக்கப்பட்ட ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை துவக்கியிருப்பதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன… வடக்கு சிந்து மாகாணதில் ஜகோபாபாத் விமானப்படை தளத்தில், போர் விமானங்களை நிறுத்துமிடத்தில் இந்தியா ஏவுகணைகளை வீசியிருந்த நிலையில், அங்குக் கூரைகள் அகற்றப்பட்டு, மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இந்திய ஏவுகணைகளால் பாகிஸ்தானின் முரித், ரஃபிகி, முஷாஃப், போலாரி, காத்ரிம், சியால்கோட், சுக்கூர் போன்ற 10 விமானப்படை தளங்கள் மிகக் கடுமையான சேதங்களை சந்தித்ததை விங் கமாண்டர் வியோமிகா சிங் கடந்த மே மாதம் உறுதிபடுத்தியிருந்தார். இதனைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் ஒப்புக்கொண்டிருந்தார்.

புவி நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும், Open Source Intelligence நிபுணருமான சைமன், இந்தியா – பாகிஸ்தான் பிராந்தியத்தில் போரின்போது ஏற்பட்ட சேத விவரங்கள், செயற்கைக் கோள் படங்கள், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் போன்ற காரணத்தால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் நிலையில், அவரது தற்போதைய பதிவு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை என்பது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Tags: இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர்Indiapakistanஆப்ரேஷன் சிந்தூர்Reconstruction work continues for 6 months: Pakistan has not recovered from the impact of Operation Sindhமீளாத பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி – ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!

Next Post

சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies