போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
நாட்டை வல்லரசாக்க பாடுபடும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
பாஜக ஆளும் மாநிலங்களிலும் S.I.R பணி நடைபெற்று வருகிறது என்றும், எல்.முருகன் குறிப்பிட்டார்.
















