ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் 12ம் பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷாலினி என்ற மாணவி, அங்கு உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவரை முனியராஜ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் மாணவி, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற இளைஞர் முனியராஜ், மாணவியை காதலிக்க வற்புறுத்தி உள்ளார். எனினும் அவர் மறுத்ததால், முனியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி ஷாலினியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ததகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியை கொலை செய்த முனியராஜை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















