ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழிலதிபர் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் உதய்பூர் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபலமான தொழிலபதிர் ராஜூ ராமலிங்கம் என்பவரது மகளின் திருமணம் ராஜஸ்தானில் நடைபெறுகிறது.
இவர்களது திருமண கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்.
மேலும் முக்கிய பிரமுகர்கள் 600 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
















