போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கானி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பேன்சி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர், போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாகவும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே வளரும் தொழில்நுட்பம், தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முத்தரப்பு கூட்டாண்மை திட்டத்தையும் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
















