அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் டிசம்பர் 10ம் தேதி காலை 10 மணி அளவில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும்
கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
















