மக்களை பற்றி யோசிக்கவே திமுக அரசுக்கு நேரம் இல்லை; திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
காஞசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எதற்காக விஜயை தொட்டோம், எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என வருத்தப்படுவீர்கள் என்றும் அவர் கூறினார்.
“தவெகவினர் தற்குறிகள் அல்ல, ஆச்சரியக்குறி என்றும், தற்குறிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் திமுகவின் அரசியலை கேள்வி குறியாக்க போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போதே கூத்தாடி கட்சி என விமர்சித்தார்கள் என்றும்,
53 வருடமாக கூத்தாடி, கூத்தாடி என்றே திமுக கதறி கொண்டிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
















