நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பாக்கம், கோபுராஜபுரம், நரிமணம், தேவங்குடி, பணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
வடிகால்வாய்கள் தூர்வாராமல் உள்ளதால் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















