தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை - மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!
Jun 14, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

அதேநேரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைக்கட்டு பகுதியில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருங்காலக்குடி, தெற்குத்தெரு, சூரக்குண்டு, கீழையூர், தனியா மங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், திருவாதவூர், வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடிரென்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை  கொட்டி தீர்த்தது.

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் தொடர் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

பின்னர் இருள் சூழ்ந்து தொடங்கிய கனமழை, இரண்டு மணி நேரத்தை கடந்தும் நீடித்தது. இதன் காரணமாக பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்..

Tags: Thoothukudi rainweather updatelow pressurerain warningmadurai rainsivaganga rainChennai metro logical depttamilnadu rainmelur rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

Next Post

நாகை மாவட்டத்தில் தொடர் மழை – வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகும் நிலை பயிர்கள்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies