புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் S.I.R குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த சீமான், செய்தியாளரை ஒருமையில் பேசி தாக்க முயன்றார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் செய்தியாளரை தாக்கி அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து சம்பவம் குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் அளித்தார். அதன்பேரில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















