கோவில்பட்டியில் அரசுப் பேருந்தை நிறுத்தி அதன் அடியில் சென்றுவிட்டு வெளியே வராமல் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்த கொம்பையா என்ற நபர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டு பேருந்தை நகர விடாமல் செய்தார். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவலர் பொன்ராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கொம்மையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும், வெளியே வர மறுத்த அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்த காவலர், பேருந்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கொம்பையாவை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
















