போர்ச்சுக்கல்லின் லிஸ்பன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் அடுத்த மாதம் 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் போர்ச்சுக்கல்லின் லிஸ்பன் நகரில் மக்கள் உற்சாகக் கிறிஸ்துமஸ் தொடக்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
லிஸ்பன் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து இரவில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின்போது வண்ண விளக்குகளால் ஜொலித்த காட்சிகள் இரவைப் பகலாக்கின.
தொடர்ந்து கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. மேலும் வாண வேடிக்கைகளும் வானை வண்ண மயமாக்கின.
இசையுடன் களைக்கட்டிய இந்தக் கிறிஸ்துமஸ் தொடக்க கொண்டாட்டம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
















