டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
20 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 7ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவையும், 15ம் தேதி பாகிஸ்தானையும், 18ம் தேதி நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒருவேளை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறும்பட்சத்தில் அந்த ஆட்டம் கொழும்புவுக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
















