விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் விண்வெளித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம் என்றும், பல தசாப்தங்களாக விண்வெளி பயணத்திற்கு இஸ்ரோ உறுதுணையாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளித்துறை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது என்றும், இந்தியாவின் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பில் தனியார் துறை பெரும் பங்களிப்பை அளித்து முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.
















