முதலமைச்சர் ஸ்டாலின் "அப்பா" என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு - நயினார் நாகேந்திரன்
Oct 27, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு – நயினார் நாகேந்திரன்

பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டுவிட்டு, உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின்  “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண் ஆசிரியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

சில நாட்களுக்கு முன், இராமேஸ்வரத்தில், இதே போல காதலிக்க மறுத்த மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட ரணம் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களின் விருப்பு வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்றுவிட்டதா திமுக
ஆட்சியின் கீழுள்ள தமிழ்ச் சமூகம்? தன்னை மறுக்கும் பெண்ணைக் கொலை செய்யும் அளவிற்குக் குற்றவாளிக்கு தைரியம் அளித்தது சீரழிந்த சட்டம் ஒழுங்கா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறையா? கற்பழிப்பு, கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என அனுதினமும் தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களைக் கண்டு, பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கும் வேளையில், முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்களோ தனது சொந்த மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு, “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்முதலமைச்சர் ஸ்டாலின்பெண் பிள்ளைThe Chief Minister who leaves his daughters to suffer and sings happy birthday to his son - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

Next Post

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies