தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் மாவீரர் நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்போட்டி என்று முழங்கிய அவர், சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை தொகுதியில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்தார்.
















