நியூயார்க்கில் மேசியின் நன்றி தெரிவிக்கும் தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.
1858 ஆம் ஆண்டு ரோலண்ட் ஹஸ்ஸி மேசி என்பவர் மேசிஸ் என்ற பல்பொருள் கடையை தொடங்கினார். அந்நிறுவனம் முதன்முறையாகக் கிறிஸ்துமஸ் விற்பனையை ஆரம்பிப்பதற்காக ஒரு விழா நடத்தியது.
கிறிஸ்துமஸ் அணிவகுப்பு என்று அந்த விழா அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மேசியின் நன்றி தெரிவிக்கும் தின அணிவகுப்பு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் நியூயார்க் நகரில் மேசியின் நன்றி தெரிவிக்கும் தின அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதற்காகக் கார்டூன் கதாபாத்திரங்களின் வடிவங்களில் ராட்சத பலூன்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
அணிவகுப்பின் இறுதியாகக் கிறிஸ்துமஸ் தாத்தா தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
















