ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதுதொடர்பாக 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தைப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைதி ஒப்பந்தம் குறித்து பேசிய உக்ரைனின் அதிபர் அலுவலக தலைவர் ஆண்ட்ரி யெமர்க், அழுத்தத்தின் கீழ் ரஷ்யாவிடம் நிலத்தை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார் என தெரிவித்தார்.
பலவீனமான நிலையில் இருந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா விரும்புவதாகவும் ஆனால் உக்ரைன் அமைதி மாயைக்காக நிலத்தை கொடுக்காது எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.
















