டிட்வா புயல் காரணமாக புதுச்சேரிக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















