திமுகவின் அறிவுறுத்தல்படி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை பற்றி சபாநாயகர் அப்பாவு அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளியை போலீசார் பிடிக்கவில்லை எனறும், தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கு போதைப்பொருள்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
















