சர்ச்சைகளில் ஈடுபடுவது இந்தியாவின் இயல்பில் இல்லை என்றும், நாட்டின் பாரம்பரியம் எப்போதும் சகோதரத்துவத்தையும் கூட்டு நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி வருவதாகவும் RSS தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் தேசியம் பற்றிய நிலைப்பாடு, மேற்கத்திய நாடுகளின் அடிப்படையில் இருந்து வேறுபட்டது எனக் கூறினார்.
தங்களுக்கு யாருடனும் எந்த வாக்குவாதமும் இல்லை என்றும் தாங்கள் தகராறு செய்வதில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய பாரம்பரியம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாகவும், தகராறு செய்வதில் இந்தியா ஈடுபடுவது கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உண்மையான திருப்தி மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் வருவதாகவும், இது தற்காலிக வெற்றியைப் போல அல்லாமல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு உணர்வு என்றும் மோகன் பாகவத் கூறினார்.
















