டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோயிலில் 172 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மணல்மேடு, மங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வரை கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 117 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக செம்பனார்கோவில் பகுதியில் 172 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகாலைக்கு பிறகு ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் தரைக்காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















