டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, கண்டி உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்ததால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் சீற்றத்தால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஆப்ரேஷன் சாகர் பந்து என்ற நடவடிக்கை மூலம் கப்பல்கள் மூலம் உணவு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















