வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது சென்னைக்கு 170 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புயல் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் டிட்வா புயல் வலுவிழக்கத் தொடங்கும் எனவும்,சென்னையை நெருங்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
















