இந்திய மொழிகள் மற்றும் தாய் மொழிகளின் பயன்பாடு குறைந்து வருவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், விழாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பக்தி என்பது அனைவருக்குள்ளும் இருப்பதாக தெரிவித்தார்.
பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுபற்றி அறிவியலும் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.
இந்திய மொழிகள் மற்றும் தாய் மொழிகளின் பயன்பாடு குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்த மோகன் பகவத், சிலர் தங்கள் சொந்த மொழி பற்றியே அறியாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.
















