உலகின் மகிழ்ச்சியான நாடாக அறியப்படும் பின்லாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட 3 நாடுளில் தனது தூதரங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள தங்களது தூதரங்களை மூடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் மியான்மர் ஆகிய இடங்களில் உள்ள பின்லாந்து தூதரகங்கள் மூட அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
















