தவெக தலைவர் விஜய் குறித்த செங்கோட்டையனின் பேச்சு வேடிக்கையானது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தவெக தலைவர் விஜய் குறித்த செங்கோட்டையனின் பேச்சு வேடிக்கையானது என்றும் “எம்ஜிஆரின் கொள்கை என்ன, விஜய்யின் கொள்கை என்ன? இது செங்கோட்டையனுக்கு தெரியாதா? என்று அவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
சேகர்பாபுவை பார்த்துப் பேசி விட்டுத் தான் செங்கோட்டையன் தாவெகாவிற்கு சென்று இருக்கிறார் என்றும் உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம் என்றும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதே முதலமைச்சர் ஸ்டாலினின் வேலை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
















