கரூர் சம்பவத்தின் எதிரொலியாகப் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-யின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது என அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் 5ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ- நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி சார்பில். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் கரூர் சம்பவத்தைக் காரணம் காட்டி, ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், தமிழகத்தை போலப் புதுச்சேரியில் பெரிய சாலைகள் இல்லை எனவும் வேண்டுமெனில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.
















