கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை வடபழனியில் இருந்து அண்ணா சாலை செல்லும் கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையை நாள்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக இந்த சாலையானது மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல ஆண்டுகளாகவே, சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டும் வாகன ஓட்டிகள், விபத்து நிகழும் முன் சாலையை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
















