நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு சர்ச்சை கருத்து தெரிவித்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
















