திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் 2 நாட்களில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
















