டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
3-ஆவது இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபா் புதின் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் அதிபர் புதின் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அப்போது அவரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்றார். பின்னர் சிவப்பு கம்பள வரவேற்பையும், படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் புதின் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற அதிபர் புதின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டிலும் புதின் கையெழுத்திட்டார்.
















