ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அடுத்த மாரச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், அதிமுக நிர்வாகி பிரசாந்தின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹரிஷை, மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மஞ்சுளா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கூலிப்படையை ஏவி ஹரீஷை, மஞ்சுளா கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால், தனக்கு தெரிந்த கும்பலுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஹரீஷை கொலை செய்ததும் அம்பலமானது. இதுதொடர்பாக மஞ்சுளா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
















