கர்நாடகா மாநிலம், தார்வாட்டில் தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்ததில் காவல் ஆய்வாளர் உயிருடன் எரிந்து பலியானார்.
ஹாவேரி லோக்ஆயுக்தா காவல் ஆய்வாளரான பஞ்சாக்ஷராய சாலிமத் என்பவர், காரில் கடக் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்தக் கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில் காவல் ஆய்வாளர் சாலிமத் சம்பவ இடத்திலேயே காரில் உயிருடன் எரிந்து பலியானார். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
















