நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இந்தியா வல்லரசாக இருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு உள்ளது அவர் குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றம் தீபம் ஏற்றலாம் என்று தெரிவித்தும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















