உலக நாடுகளே தடுமாறும்போது, பொருளாதாரத்தில் இந்தியா அசுர வளர்ச்சி காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 25 ஆண்டுகளில் உலகளாவிய பெருந்தொற்றுகள், போர்கள் மற்றும் தொழில்நுட்ப இடையூறுகள் ஆகியவற்றால் உலகம் நிச்சயமற்ற தன்மையால் நிரம்பியுள்ளதாகவும், இந்த நெருக்கடிச் சூழலுக்கு மத்தியில், இந்தியா ஒரு தனித்துவமான நம்பிக்கையின் தூணாக இருப்பதாகவும் கூறினார்.
உலக நாடுகள் பிளவுபடும் போது, இந்தியா அதற்கு பாலமாக மாறுவதாகவும், இந்தியாவின் 2வது காலாண்டிற்கான GDP 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.
இது வெறும் எண்கள் அல்ல, நமது வலுவான பொருளார சமிக்ஞைகள் என்று கூறிய பிரதமர், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இயக்கும் நாடாக இந்தியா உயர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
















