அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருதினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க விவசாயிகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் உதவியை டிரம்ப் அறிவித்தார்.
அப்போது, மலிவான இறக்குமதிகளால் சந்தையில் போட்டியிடுவது கடினமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, இந்திய அரிசியை ஏன் அதிகளவில் இறக்குமதி செய்கிறீர்கள் என்றும், அரிசிக்கு வரிவிலக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கருவூல செயலாளர், இந்திய அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியா அதிகளவில் அரிசியை இறக்குமதி செய்யக் கூடாது என்றும், இந்த விவகாரத்தை கவனித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
















