ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள், விவாதங்கள், விருந்துகள், நினைவுப்பரிசுகள் போன்றவை நடைபெற்றன.
இந்த சூழலில், இந்திய பணம் குறித்து பேசியுள்ள புதின் சுமார் 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை என்றும், 50 முதல் 60 கோடி மக்களை தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர் எனவும் கூறியுள்ளார். இது இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார்.
















